Archives

No archives to show.

Categories

  • No categories

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்த

இலத்திரனியல் கற்றல் தொகுதி

இந்த பாடநெறியைக் கற்பதிலுள்ள முக்கியத்துவம்

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பாதுகாப்புப் படையினருக்கான பொறுப்பு மட்டுமல்ல. சந்தேகத்திற்கிடமான நடத்தை மற்றும் பொருட்களை இனங்கண்டு, அவை தொடர்பில் சட்டத் துறையினருக்கு அறிவிப்பதன் மூலம் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் தடுக்கவும் குறைக்கவும் நீங்களும் உதவலாம்.

இப் பாடத்திட்டத்தில், சந்தேகத்திற்கிடமான நடத்தைகளை இனங்காணும் முறை, அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், சந்தேகத்திற்கிடமான பொருளொன்று தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் மற்றும் வெடிகுண்டு தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய விதம் என்பவற்றின் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்கள்.

இறுதியாக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அரிதாகவுள்ள துப்பாக்கி அல்லது ஆயுதங்களைப் பாவித்து தாக்குதல் நடத்தப்படும் போது உங்களுடையதும் மற்றவர்களுடையதுமான பாதுகாப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவையென்பதைக் கற்றுக் கொள்ள முடியும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வழிக்கும் பாடநெறி

இக் கற்றல் தொகுதி ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயற்படும் பொலிசாரால் (Counter terrorism Police) உருவாக்கப்பட்டது. அதில் அடங்கியுள்ள காட்சிகளும் உதாரணங்களும் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடையவை. எனினும் உள்ளடக்கம் உங்கள் விழிப்புணர்வுக்காக முற்றாகத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த முழுமையான கற்றல் தொகுதி 7 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியின் நிறைவிலும் அதனோடு தொடர்புடையதாகக் கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான பதிலை வழங்குவதன் மூலம் கற்றல் தொகுதியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து உங்களுடைய சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வுக்

கற்றல் தொகுதியின் தலைப்புகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் விழிப்புணர்வு

0 K
ONLINE MODULES
0 K
CERTIFICATES
0 K
ONLINE LEARNERS

By Pixelanka